Saturday, March 8, 2014
இன்று மகளீர் தினம்!!
பேதையாய் மடியில் பிறந்து (1-8)
பெதும்பையாய் துள்ளித்திரிந்தாய் (9-10)
மங்கையாய் பூப்பெய்தி (11-14)
மடந்தையாய் நடைபோட்டாய் (15-18)
அரிவையாய் புதுவாழ்வில் புகுந்து (19-24)
தெரிவையாய் நல்வாழ்வு நடத்தி (25-29)
இன்று பேரிளம் கொண்டு (30)...
பெண்மையை நிலைநாட்டினாய்!
பெண்ணும் பூவும் ஒன்றுதான்!
மென்மையானவர்கள்!
பெண்ணும் இரும்பும் ஒன்றுதான்!
வலிமையானவர்கள்!
பெண்ணும் கடலும் ஒன்றுதான்!
ஆழம் அறியமுடியாதவர்கள்!
பெண்ணும் பனியும் ஒன்றுதான்!
இலகுவாய் கரைபவர்கள்!
பெண்ணும் நிலவும் ஒன்றுதான்!
குளிர்ச்சியானவர்கள்!
பெண்ணும் கண்ணும் ஒன்றுதான்!
போற்றப்படவேண்டியவர்கள்!
பெண்ணும் நிலமும் ஒன்றுதான்!
பொறுமையானவர்கள்!
ஆயிரம்தான் ஆண் சம்பாதித்து போட்டாலும்
பெண்ணில்லா வீடு நீறில்லா கேணி போலத்தான்!
இக்காலத்தே ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல! அதற்கும் மேல்
பெண்கள் உழைக்கிறார்கள்! குடும்பத்தை காக்கிறார்கள்!
தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையைக் கொஞ்சக்கூட
நேரமின்றி பணிக்கு சென்று குடும்பம் வளர்க்கும்
பெண்களை நானறிவேன்!
சில பெண்கள்
முட்டாள்த்தனமாக அரங்கேற்றும் தவறுகளால்
பல பெண்களின் அழகான
வாழ்க்கையே அர்த்தமில்லாமல்
அழிந்துபோகிறது
சில ஆண்களின் ஆசை போதையால்
பல பேதைகளின் முடிவு
பிணமாய்க் கிடக்கிறது
விஷ மருந்தால்
மண் கெட்டுப்போவது போல
மதுவால் ஆண் மதிக்கேட்டு
பெண் மிதிப்பட்டு கிடக்கிறாள்
பெண்ணுக்கு துயரம் என்பது
வறுமையில் இல்லை
தன் கற்பு இல்லையெனில்
அவளுக்கு வாழ்க்கையே இல்லை
பணத்தினும் உயர்ந்தது நட்பு
நட்பினும் உயர்ந்தது அன்பு
அன்பினும் உயர்ந்தது கற்ப்பு
கற்பு இல்லையேல்
பெண் சிலையும் உடைந்து போகும்
அதிசயம்
பெண்மை என்பது மென்மை, பறவையின் இறகு கூட தோற்கும், தாயின் வருடலில்...
நீரின்றி அமையாதுலகு என்பதே போல., பெண்ணின்றி விளங்காதுலகு என்பதும் உண்மைதான்.!
ஈராயிரம் ஆண்டு பண்பாட்டினைப் பறைசாற்றிவரும் நம் இலக்கியங்களில் பெண்மையின் பல பரிமாணங்கள் ஆராய்தலுக்குரியது. கல்வி, வீரம், காதல், இயற்கை, ஆன்மீகம் என எல்லா துறைகளிலும் பெண்மை பல இடங்களில் வளர்ச்சிக்குரியது..!
விளக்கென்றால் திரியாக இருப்பாள்., விரலென்றால் நகமாக இருப்பாள். வானமென்றால் இருளில் நிலவாக ஒளி வீசுவாள்., வாழ்க்கையென்றால் இதயத்தில் துணைவியாக ஒளி வீசுவாள்.!
ஆண்மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைப்பவலும் பெண் தான்., ஆளுமை திறத்துடன் உலகத்தை ஆள்பவலும் பெண் தான்., மழை தரும் கருநிற மேகமும் பெண் தான்., மனதில் சுகம் தரும் இதய துடிப்பும் பெண் தான்.
கடலில் அலையும் பெண் தான்., கண்ணில் விழியும் பெண் தான்., நம்மை சுமக்கும் பூமித்தாயும் பெண் தான்., நட்போடு நடை பழகியவலும் பெண் தான்.,
அன்போடு ஆதரித்த அன்னை தெரேசாவும் பெண் தான்., அன்புள்ளம் கொண்ட தாய்மை குழந்தைக்காக அகத்தில் இரத்தத்தை பாலாக மாற்றி ஊட்டும் அன்னையும் பெண் தான்.,
உன்னை மடியினில் சுமந்தவளும் பெண் தான்., என்னை கருவறையில் சுமந்தவளும் பெண் தான்..!
பெண்மையை போற்றுவோம்..!
என் உடன் பிறவா சகோதரிகள், தோழிகள் மற்றும் உறவான நட்புக்களுக்கு என் மனமார்ந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment